‘நைட்டு 7 மணிக்கு வெளிய என்ன வேல..?’ பெண்ணின் பாலியல் துன்புறுத்தல் புகாரை ஏற்க மறுத்த உபி போலீஸ்

 
Uttar pradesh

உத்தர பிரதேசத்தில் பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்ணிடம் காவல்துறை அதிகாரிகள் அலட்சியமாக நடந்து கொண்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில்  செக்டார் 48 பகுதியில்  இளம்பெண் ஒருவர் இரவு 7.30 மணியளவில் மழையை வீடியோ எடுக்க வீட்டின் வெளியே சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர், தன்னை தகாத முறையில் தொட்டு, தான் அணிந்திருந்த ஷார்ட்ஸை கிழித்ததாக போலீசில் புகார் அளிக்க சென்றுள்ளார். அவரிடம், ஏன் நீங்கள் அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்றீர்கள் என்று கேட்ட போலீசார்  எப்.ஐ.ஆர் பதிய மறுத்துள்ளனர்.

Rape

இதனால் அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையைப் பற்றி வீடியோவில் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, நெட்டிசன்கள் காவல்துறை அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர்.  இதனை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறியுள்ளனர். 

இதுகுறித்து நொய்டா போலீசார் கூறுகையில், “ஆகஸ்ட் 3-ம் தேதி பாதிக்கப்பட்டவர்களால் செக்டார் 49 காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரால் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. கடுமையான பிரிவுகளின் கீழ் உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் மழையில் நனைந்தபடி வீடியோ பதிவு செய்த இடம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என நொய்டா போலீசார் உறுதியளித்தனர். 


பாதிக்கப்பட்ட பெண் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றும், அவர் நொய்டாவில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From around the web