ஆல் பாஸ் திட்டத்திற்கு ஆப்பு! ஒன்றிய அரசு அறிவிப்பு!!
பள்ளி மாணவர்களின் இடை நிற்றலை தடுக்கும் வகையில் 5 முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டு அடுத்த வகுப்புக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆண்டுத் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெறவில்லை என்றாலும் அடுத்த வகுப்புக்கு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். 2009ம் ஆண்டு முதல் அமலில் இருந்த இந்த நடைமுறையை ரத்து செய்துள்ளது ஒன்றிய அரசு.
5ம் வகுப்பு முதல் , ஒவ்வொரு வகுப்பிலும் ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இரண்டு மாதம் கழித்து மீண்டும் தேர்வு வைக்கைப்பட்டு அதிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அதே வகுப்பில் தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பள்ளி இடைநிற்றலை அதிகரிக்கவே இந்தத் திட்டத்தை பாஜக அரசு அமல்படுத்துகிறது என்று எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியுள்ளது. கல்வி பொதுப்பட்டியலில் உள்ளது என்பதால், மாநில அரசுகள் என்ன முடிவு எடுக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.