எங்களுக்கு ரூல்ஸ் கிடையாது.. டெல்லி மெட்ரோ ரயிலில் லிப்-லாக்.. ரொமான்ஸ் மூடில் காதல் ஜோடி.. வைரல் வீடியோ!

 
Delhi metro

டெல்லியில் மெட்ரோ ரயில் பெட்டிக்குள் காதல் ஜோடி முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மெட்ரோ ரயில் பார்ப்பதற்கு ஸ்டைலிஷ்ஷாக, டம்ளர் நிறைய தண்ணீரை கொண்டு சென்றாலும் கீழே ஒழுகாத நல்ல கட்டமைப்பை கொண்டது. முழுக்க முழுக்க ஏசி, பாசன்ஜர் ரயில்களில் அலுப்பே தெரியாது. மெட்ரோ ரயில் என்றால் கேட்கவா வேண்டும்? பெரும்பாலும் மெட்ரோவில் பயணிப்பதையே மக்கள் விரும்புகிறார்கள். டெல்லி மெட்ரோ ரயிலை தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த ரயிலில் சில நேரங்களில் சர்ச்சையான சம்பவங்கள் நடக்கின்றன.

ஒரு முறை அரை நிர்வாண உடையில் வந்த ஆண் பயணி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து பெண் ஒருவர் தனது நிறுத்தம் வந்தவுடன் இறங்குவதற்காக எழுந்தார். பார்த்தால் பிகினி போன்ற உடையை அணிந்திருந்தார். அனைவரது பார்வையும் அவர் மீதுதான் இருந்தது. கீழே அணிந்திருந்த ஆடையில் ஆங்காங்கே ஸ்டைலுக்காக கிழிந்திருந்தது. அது எலி கடித்துவிட்டதா என நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர்.

Delhi Metro

மேலும் இளம் ஜோடிகள் முத்தமிட்டு கொள்வது, கட்டியணைத்து கொள்வது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்ட வைரல் வீடியோக்கள் வெளியானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது ஒரு வீடியோ வெளியாகி அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

மெட்ரோ ரயில் ஓடி கொண்டிருந்தபோது, இளைஞர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் கட்டியணைத்து கொண்டு முத்தமிட்டு கொள்வதை இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. ஆனந்த் விஹார் பகுதியில் ரயில் சென்று கொண்டிருந்தபோது இந்த அநாகரீகம் அரங்கேறியுள்ளது. இந்த இளம் ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.


அதேபோல், முதியவர் ஒருவர் மெட்ரோ ரயிலில், புகை பிடிக்கும் வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்றும், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

From around the web