இந்தியாவுக்காக போராடுகிறோம்... கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அதிரடி!!

 
DK Shivakumar DK Shivakumar

தொகுதி மறுவரையறை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ள கூட்டுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவரை விமானநிலையத்திலிருந்து அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி வரவேற்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய சிவக்குமார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டாட்சி தத்துவத்தையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்கும் வகையில் முதல் படியை எடுத்து வைத்துள்ளது பெருமையாக் உள்ளது. நாங்கள் தனிப்பட்ட நபருக்காகப் போராடவில்லை இந்தியாவின் நலனுக்காகப் போராடுகிறோம். பாஜகவின் அச்சுறுத்தலைக் கண்டு எங்களுக்கு எந்த பயமும் இல்லை. தொகுதிகள் குறைக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க மாட்டோம். அனைவரும் ஒன்றிணைந்து வெற்றியை நோக்கி பயணிப்போம்” என்று கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து டி.கே.சிவக்குமாரை வரவேற்று அழைத்துச் சென்றார்

From around the web