வக்ஃப் மசோதா.. எதிர்க்கட்சிகள் முடிவு என்ன?

 
india leaders

நாடாளுமன்றத்தின் மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நாளை வாக்கெடுப்புக்கு வருகிறது. இந்தச் சட்டத்திருத்தம் வக்ஃப் சட்டத்தையே நீர்த்துப் போகச்செய்யும் அளவுக்கு ஏகப்பட்ட மாறுதல்களுடன் உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

வக்ஃப் மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாகத் தீர்மான இயற்றப்பட்டது. அதிமுகவினரும் சட்டமன்றத்தில் ஆதரவு தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் நாளை வாக்கெடுப்புக்கு வரும் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணிக் கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு  உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூடிப் பேசி இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மக்களவையில் அதிமுகவுக்கு பிரதிநிதிகள் இல்லை என்பதால் இந்த வாக்கெடுப்பில் அதிமுகவுக்கு எதிர்த்து வாக்களிக்கும் வாய்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.