பிரதமர் மோடியை சந்தித்தார் அமெரிக்க புலனாய்வுத் துறை இயக்குனர் துள்சி கப்பார்ட்!!

 
Modi Tulsi

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள அமெரிக்க புலனாய்வுத் துறை இயக்குனர் துள்சி கப்பார்ட் பிரதமர் மோடியை சந்தித்தார். அவருக்கு கும்ப மேளாவில் சேகரிக்கப்பட்ட புனித நீர் நிரம்பிய கலசத்தை அன்பளிப்பாக வழங்கினார் பிரதமர் மோடி.

இந்த சந்திப்பு குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை  மேலும் மேம்படுத்துவது குறித்து பேசியதாகக் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்தை ஒழிப்பதிலும் கடல்சார் போக்குவரத்தை மேம்படுத்துவதிலும், இணையப் பாதுகாப்பிலும் இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஹவாய் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட துள்சி கப்பார்ட் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் இல்லையென்றாலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர். பகவத் கீதையின் மீது பதவிப் பிரமாணம் செய்து கொண்டவர் ஆவார்.