டெங்கு காய்ச்சலுக்கு ஒன்றிய அமைச்சரின் மனைவி பலி.. அமைச்சருக்கும் டெங்கு பாதிப்பு

 
Odisha

ஒடிசாவில் ஒன்றிய அமைச்சரின் மனைவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மாநிலத்தில் டெங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

Dengue

இந்த நிலையில்தான் ஒன்றிய அமைச்சர் ஜூவல் ஓரம் மனைவி ஜிங்கியா டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த ஒன்பது நாள்களுக்கு முன்னர் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்து நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். 

ஜூவல் ஓரம் மனைவியின் மறைவுக்கு அம்மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். ஜூவல் ஓரமின் அரசியல் பயணத்தில் ஜிங்கியா முக்கிய பங்காற்றினார் என்று அவர் தெரிவித்துள்ளார். 

Dead Body

அதே மருத்துவமனையில் ஜூவல் ஓரமும் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. ஜூவல் ஓரம் - ஜிங்கியா தம்பதிக்கு 2 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அமைச்சரின் மனைவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web