தமிழ்நாடு பட்ஜெட்டில் ’ரூ’ இலச்சினை - ஒன்றிய நிதியமைச்சர் எதிர்ப்பு!!

இன்று தாக்கல் செய்யப்படும் தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் ரூபாய்க்கான இந்திய அரசின் இலச்சினைக்குப் பதிலாக “ரூ’ என்ற தமிழ் எழுத்து இலச்சினை உபயோகப்படுத்தப்படுகிறது.
இதற்கு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ” ரூபாய் குறியீட்டை நீக்குவது இந்திய ஒற்றுமையைப் பலவீனப்படுத்தி பிராந்திய பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிக்கிறது. முற்றிலும் தவிர்க்க வேண்டிய, மொழி, மற்றும் பிராந்திய பேரினவாதத்திர்கு உதாரணமாகவும் இது உள்ளது.
மாநில பட்ஜெட் ஆவணங்களில் ரூபாய் இலச்சினை போன்ற தேசிய சின்னத்தை நீக்குவது தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துகிறது. உண்மையிலேயே இந்த் இலச்சினை மீது பிரச்சனை இருந்தால், 2010ம் ஆண்டு இந்த சின்னம் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை” என்று நிர்மலா சீத்தாராமன் கூறியுள்ளார்கொண்டு