யுஜிசி நெட் தேர்வு தேதி மாற்றம்.. எப்போது? ஏன்? வெளியான அறிவிப்பு
சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக யுஜிசி நெட் தேர்வு வரும் ஜூன் 18-ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் இந்தத் தேர்வு ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்தப்படுகிறது.
இந்த நிலையில் 2024-ம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வு 16-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் தேர்வர்களின் கோரிக்கைக்கு இணங்க, ஜூன் 18=ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில், தேர்வு ஓஎம்ஆர் முறையில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேசியத் தேர்வுகள் முகமை விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பை யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
The National Testing Agency and UGC have decided to shift the UGC-NET from 16 June (Sunday) to 18 June 2024 (Tuesday) because of feedback received from candidates. NTA will conduct UGC-NET in OMR mode across India on a single day. NTA will soon issue a formal notification. pic.twitter.com/UX5O74NQrI
— Mamidala Jagadesh Kumar (@mamidala90) April 29, 2024
கூடுதல் விவரங்களுக்கு www.nta.ac.in , ugcnet@nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம். தேர்வர்கள் 011 40759000 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளலாம்.