ரயில் மோதி 2 சிறுவர்கள் பலி.. தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் ஆடியபோது விபரீதம்!

 
chhattisgarh

சத்தீஸ்கரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து செல்போன் கேம் விளையாடிய 2 சிறுவர்கள் ரயில் மோதி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டம் பத்மநாப்புர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ரிசாலி பகுதியைச் சேர்ந்ந சிறுவர்கள் வீர் சிங் , புரன் ஷகு (14). சிறுவர்கள் இருவரும் நேற்று இரவு 7 மணியளவில் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர்.

boy-dead-body

அப்போது, அந்த தண்டவாளத்தில் ரயில் வந்துள்ளது. ரயில் வருவதை கவனிக்காத சிறுவர்கள் தொடர்ந்து செல்போனில் கேம் விளையாடியுள்ளனர். இதனால், அதிவேகமாக வந்த ரயில்  சிறுவர்கள் மீது மோதியது. இச்சம்பவத்தில் சிறுவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பத்மநாப்புர்  போலீசார் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக ரயில்வே போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Police

முதற்கட்ட விசாரணையில் ரயிலில் இருந்து வரும் ஹாரன் சத்தம் எழுப்பியபோதும் அதனை பொருட் படுத்தாமல் கேம் விளையாடியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web