ஜஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பரிதாப பலி.. தாயே விஷம் கொடுத்தது அம்பலம்!

 
Karnataka

கர்நாடகாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பெட்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் திரிசூல், திரிஷா ஆகிய இரட்டை குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று இவர்களது ஊருக்கு வாகனத்தில் கொண்டு வந்து ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்பட்டது.

இதை பூஜா தனது 2 குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்தார். பின்னர் அவரும் சாப்பிட்டார். அதனை சாப்பிட்ட சில மணி நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்கிரீம் சாப்பிட்ட பூஜாவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

Baby

இதனை தொடர்ந்து 2 குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பூஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் அந்த ஊரில் பலரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே இரட்டை குழந்தைகளின் மரணம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சமப்வம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வந்தனர்.

Police

விசாரணையில் தனது கணவர் பிரசன்னாவுடன் அடிக்கடி தகராறு தொடர்ந்து வந்த நிலையில், நேற்று இரட்டையர்களான திரிஷூல், த்ரிஷா மற்றும் மூத்த மகள் பிருந்தா ஆகியோருக்கு வீட்டில் இருந்த கரப்பான் பூச்சி மருந்தை கொடுத்து விட்டு, பூஜாவும் அதை சாப்பிட்டுள்ளார்.

From around the web