மேற்கு வங்கத்தில் அடுத்தடுத்து கொடூர ரயில் விபத்து.. 5 பேர் பலி, பலர் படுகாயம்

மேற்கு வங்கத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் பின்புறம் சரக்கு ரயில் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் ரங்காபாணி ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை நோக்கி கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது சிக்னல் கிடைக்காததால், ரயில் நிறுத்தப்பட்டது. அந்த நேரத்தில், கஞ்சன்ஜங்கா ரயில் நின்று கொண்டிருந்த அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த மற்றொரு சரக்கு ரயில் வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த சரக்கு ரயில் முன்னாள் நின்றிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறத்தில் மோதியது.
இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் 3 பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இந்த பெட்டிகளில் இருந்த 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்புப் பணிகளை தொடங்குமாறு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டு உள்ளார். சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீட்புப்படையினர் தற்போது மீட்புப்பணிகளை துவங்கி மேற்கொண்டு வருகின்றனர். பலர் ரயில் பெட்டிகளில் சிக்கியிருக்கலாம் என்பதால், பலி எண்ணிக்கை உயரும் அச்சம் உருவாகியுள்ளது.
#WATCH | Goods train rams into Kanchenjunga Express train in Darjeeling district in West Bengal, several feared injured
— ANI (@ANI) June 17, 2024
Details awaited. pic.twitter.com/8rPyHxccN0
இந்த விபத்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ள ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரயில்வே மூத்த அதிகாரிகள் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். ரயில்வே தரப்பில் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.