தொடரும் சோகம்... மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

 
West Bengal
மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பாகா நகர் ரயில் நிலையம் அருகே கடந்த 2ம் தேதி மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 288 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த 1000-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
West Bengal
அவர்களில் கட்டாக் எஸ்.சி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிலர் உயிரிழந்ததை அடுத்து ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 292 ஆக அதிகரித்தது. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.


 

இந்த விபத்தில் ஒரு ரயிலில் இருந்த ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரயில் பெட்டிகளை மீட்டு பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ரயில்களும் காலியாக இருந்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் காரணமாக கரக்பூர் - பாங்குரா - ஆத்ரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

From around the web