ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை மீட்பு.. பரபரப்பு காட்சிகள்

 
Rajasthan

ராஜஸ்தானில் 35 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டம் ஜோத்புரியாவில் பாண்டூகி கிராமத்தில் நேற்று மாலை 6 மணியளவில் 2 வயது பெண் குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, குழந்தையை காணவில்லை என்பதை அறிந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அருகில் 35 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் குழந்தை விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

Rajasthan

சிறிது நேரம் போராடியும் எடுக்க முடியாமல் போன நிலையில், தேசிய பேரிடர் மேலாண் மீட்புப்படையினர், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் வரவழைக்கப்பட்டனர். 

இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் கூறுகையில், சுமார் 15 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியுள்ளது. குழந்தை விழுந்த இடத்தின் பக்கத்து நிலத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது என தெரிவித்தனர்.


மேலும் குழாய் மூலம் ஆக்சிஜன் சப்ளை கொடுக்கப்பட்டு, கேமரா மூலம் குழந்தை கண்காணிக்கப்பட்டு வந்தது. நேற்று இரவு முதல் அங்கு தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வந்தது. இந்நிலையில் 18 மணி நேர போராட்டத்துக்குப் பின் குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

From around the web