ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி பலி.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Kerala

கேரளாவில் நேற்று ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குன்னமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மினி என்ற சிந்து (46).  இவர் தனது மகள் ஆதிரா (28) மற்றும் அவர்களது உறவினரின் 13 வயது மகன் அத்வைத் ஷைஜு மூவரும் ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

water

புலிக்காமண்ணுகடவு அருகே மாலை 5.45 மணியளவில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது சிறுவன் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளான். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்ந மினி மற்றும் ஆதிரா இருவரும் அத்வைத்தை காப்பாற்ற முயன்றபோது இருவரும் நீரில் மூழ்கினர்.

மூவரும் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் 3 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Police

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web