2 சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர்.. தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுப்பு

 
Kanpur

உத்தர பிரதேசத்தில் 2 மைனர் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கடம்பூர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த செங்கல் சூளையில் 2 மைனர் சிறுமிகள் வேலை செய்து வந்தனர். இந்த சிறுமிகளை சில நாட்களுக்கு முன்பு, செங்கல் சூளையின் காண்டிராக்டர் ராம்பூர் நிஷாத் (48), அவரது மகன் ராஜூ (18) மற்றும் உறவினர் சஞ்சய் (19) ஆகிய 3 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Rape

மேலும் இந்த செயலை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து 2 சிறுமிகளையும் மிரட்டி வந்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், செங்கல் சூளையில் இருந்து சுமார் 400 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மரத்தில் நேற்று மாலை சிறுமிகள் 2 பேரின் உடல்களும் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 3 நபர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த வீடியோக்களை பறிமுதல் செய்த போலீசார், குற்றவாளிகள் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

Kanpur

இதனிடையே உயிரிழப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறியவும், கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை உறுதி செய்யவும் 2 சிறுமிகளின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web