ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்.. துணிச்சலுடன் சண்டையிட்டு விரட்டிய சிங்கப் பெண்கள்.. வைரல் வீடியோ!

 
Telangana

தெலுங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் இருவரும் சண்டையிடும் சிசிடிவி காட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கானா மாநிலம் ரசூல்புரா அருகே உள்ள பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத்துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் புகுந்தனர். அப்போது வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் துணிச்சலுடன் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு விரட்டினர். முதலில் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வீட்டிற்குள் புகுந்த கொள்ளையனை கட்டையால் தாக்கியும், சண்டையிட்டும் வீட்டை விட்டு வெளியேற்றினர்.  

Telangana

இரண்டாவது கொள்ளையன் கையில் கத்தியை காட்டி மிரட்டினான். அவன் வீட்டை விட்டு வெளியேறி தாய் மற்றும் மகள் இருவரையும் தாக்க முற்பட்டான். பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் கொள்ளையனை பிடிக்க தயங்கினாலும், தாய், மகள் இருவரும் சண்டையிட்டு இரண்டாவது கொள்ளையனையும் விரட்டினர். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரின் விசாரணையில், சிசிடிவியில் பதிவாகி இருந்த சுஷில் குமார், பிரேம் சந்திரா என 2 கொள்ளையர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்த இருவரும் செகந்திரபாத்தில் தங்கி நிழலான காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். 


அமிதா அடிப்படையில் தற்காப்பு கலை பயின்றவர் என்பதால், தனது மைனர் மகளுடன் இணைந்து துணிச்சலுடன் கொள்ளையர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்திருக்கிறார். சினிமா காட்சிகளுக்கு சவால் விடும் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக, அமிதா மற்றும் அவரது மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

From around the web