தேர்வு இல்லை.. அஞ்சல் துறையில் 44,228 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பிங்க!
இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிராம அஞ்சல் பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அஞ்சல்துறையின் துறை சாராத சேவை அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப்பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1,29,346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் இந்த கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை போஸ்ட் மாஸ்டர்கள் ஆகியோரால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் கிளை போஸ்ட் மாஸ்டர்கள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள், துணை மற்றும் தலைமை அஞ்சல் அலுவலகங்களில் பணியாற்றி வருகிறார்கள். கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேர ஊழியர்களாகப் பயன்படுத்துதல் இந்த அமைப்பின் முக்கிய அம்சமாகும். இந்தப் பணியாளர்கள் தங்களது 65வது வயது வரை பணியில் இருப்பார்கள்.
பதவியின் பெயர்: தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர்
காலியிடங்கள்: 44,228 (தமிழ்நாட்டில் மட்டும் 3,789)
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
தபால் அலுவலர் பணிக்கு ரூ.12,000 – 29,380 வரையும், உதவி தபால் அலுவலர் பணிக்கு ரூ.10,000 – 24,470 வரையும் சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த கிராம அஞ்சல் பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.08.2024