2,049 காலி பணியிடங்கள்.. மத்திய அரசில் வேலை வாய்ப்பு.. 10, 12-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 
SSC

ஒன்றிய அரசில் காலியாக உள்ள 2,049 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள SSC Phase XII தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு மூலம் Group C, Group D பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 2,049 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள்

Lab Attendant, Binder, Sanitary Inspector, Senior Projectionist,  Field cum Laboratory Attendant, Nursing Orderly, Driver cum Mechanic, Workshop Attendant, Boiler Attendant, Technical Operator, Photographer, Field cum Lab Attendant, Photo Artist, Canteen Attendant, Compositor, Field Attendant, MTS, Library Clerk, Staff car Driver, Medical Attendant.

12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான பதவிகள்

NURSING OFFICER, TECHNICAL OFFICER, SENIOR SCIENTIFIC ASSISTANT, SENIOR RESEARCH ASSISTANT, ASSISTANT TECHNICAL OFFICER, JUNIOR CHEMIST, AGRICULTURE ASSISTANT, SENIOR TECHNICAL ASSISTANT, MEDICAL LABORATORY TECHNOLOGIST, PHARMACIST, AYURVEDIC PHARMACIST, LABORATORY ASSISTANT, Lab Assistants, Junior Technical Assistants, Laboratory Technician, Clerk, Senior Surveyor, Carpenter cum Artist, Receptionist / Ticketing Assistant, Junior Engineer, Senior Technician Assistant, Offset Machine man, Technical Clerk, Field Assistant, Senior Photographer, Preservation Assistant, Senior Conservation Assistant, Data Entry Operator (DEO), Clerk, Store Keeper, Photo Assistant, Library Clerk, Library Attendant, Stockman, Junior Computer

jobs

டிகிரி முடித்தவர்களுக்கான பதவிகள்

Store Keeper, Junior Engineers, Scientific Assistant, Field Assistant, Technical Officer, Dietician, Technical Superintendent, Textile Designer, Senior Scientific Assistant, Girls Cadet Instructor, Library and Information Assistant, Junior Technical Assistant, Senior Technical Assistant, Junior Zoological Assistant, Technical Officer, Scientific Assistants, Instructors, Junior Scientific Assistant, Senior Radio Technician, Research Associate, Tutor, Perfusionist, Store Incharge, Medical Record Officer, Nursing Officer, Dietician, Investigator, Assistant Curator, Assistant Scientific Officer, Wildlife Inspector, Assistant Extension Officer, Assistant Central Intelligence Officer, Assistant Drug Inspector, Legal Assistant, Junior Accounts Officers, Data Processing Assistant, DEO, Upper Division Clerk, Geographer

காலி பணியிடங்கள்: 2,049

கல்வித் தகுதி :

குறைந்தபட்ச கல்வித் தகுதியாக பதவி வாரியாக 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு சில பதவிகளுக்கு பதவியை பொறுத்து கூடுதல் தகுதி தேவைப்படும்.

வயதுத் தகுதி:

01.01.2024 அன்று 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு வயது வரம்பு கூடுதலாகவும், குறைவாகவும் உள்ளது. மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு தளர்வு உண்டு.

சம்பளம்:

PB-1 ரூ. 5,200 - 20,200 + GP ரூ. 2,400

PB-2 ரூ. 9,300 - 34,800 + GP ரூ. 4,200

Application

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 100. இருப்பினும் SC, ST, PWD மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை :

கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் திறனறி, கணிதம், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு ஆகிய பிரிவுகளிலிருந்து தலா 25 வினாக்கள் என மொத்தம் 100 வினாக்கள் இடம்பெறும். 200 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.nic.in/Portal/Apply என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.03.2024

From around the web