139 காலி பணியிடங்கள்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மாதம் ரூ.1.40 லட்சம் சம்பளம்!

மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் வரும் பொதுத்துறை நிறுவனம் மத்திய கிடங்கு கழகம். இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள மத்திய கிடங்கு கழகத்தில் காலியாக உள்ள 139 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர்: உதவி என்ஜினியர் (சிவில்), உதவி என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்), அக்கவுண்டன்ட், கண்காணிப்பாளர் (பொது), ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட்
காலி பணியிடங்கள்: 139 (உதவி என்ஜினியர் (சிவில்) - 18, உதவி என்ஜினியர் (எலக்ட்ரிக்கல்) - 5, அக்கவுண்டன்ட் - 24, கண்காணிப்பாளர் (பொது) - 11, ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் - 81)
கல்வி தகுதி:
உதவி என்ஜினியர் (சிவில்) பணியிடத்திற்கு சிவில் என்ஜினியரிங்கில் பட்டம் முடித்து இருக்க வேண்டும். உதவி என்ஜினியர் (எலக்ட்ரிகல்) பணியிடத்திற்கு எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் டிகிரி முடித்து இருக்க வேண்டும்.
அக்கவுண்டன்ட் பணிக்கு பி.காம் அல்லது பிஏ (வணிகம்) அல்லது பட்டய கணக்காளர் உள்ளிட்ட பிரிவில் ஏதேனும் துறையில் கல்வி தகுதி பெற்று இருக்க வேண்டும். மூன்று ஆண்டுகள் பணி அனுபவமும் அவசியம்.
கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு வேளாண்மை அல்லது உயிரியில், வேதியியல், பயோ கெமிஸ்ட்ரி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். எனினும் அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
சம்பளம்:
ஜூனியர் டெக்னிக்கல் அஸ்சிஸ்டண்ட் பணியிடத்திற்கு மாதம் ரூ.29,000 முதல் 93,000 வரை சம்பளமாக வழங்கப்படும். இதர பணியிடங்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் 1.40 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது.
தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் 1,450 செலுத்த வேண்டும். எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் ரூ.400 கட்டணமாக செலுத்த வேண்டும். நாடு முழுவதும் தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர் ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை எப்படி?
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ibpsonline.ibps.in/cwcaug23/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.09.2023
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டும் என்றாலும் பணியமர்த்தப்படலாம். சென்னை, அம்பத்தூர், குரோம்பேட்டை, கோவை, தூத்துக்குடி, திருச்சி மாதவரம், நாகர்கோவில், உடுமைலைப்பேட்டை உள்ளிட்ட பணியமர்த்தப்படும் வாய்ப்பு உள்ளது.