ஆகஸ்ட் மாதத்தில் 9 நாட்கள் விடுமுறை.. வாடிக்கையாளர்களே வங்கி பணிகளை திட்டமிட்டுக்கோங்க!!

 
Bank

ஆகஸ்ட் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 9 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும்.

Bank

பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

அந்த வகையில் பொது விடுமுறை, வார இறுதி விடுமுறை, பண்டிகை கால விடுமுறை என மாதந்தோறும் பல நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்பட்டிருக்கும். இந்த விடுமுறைகள் அனைத்தும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேறுபடுவது உண்டு. ஆகஸ்ட் மாதத்தில் சுமார் 9 நாட்களுக்கு வங்கிகள் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

bank

ஆகஸ்ட் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

ஆகஸ்ட் 4, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 10, 2024 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 11, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 15, 2024 - வியாழக்கிழமை - சுதந்திர தினம்
ஆகஸ்ட் 18, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 19, 2024 - திங்கட்கிழமை - ரக்ஷா பந்தன்
ஆகஸ்ட் 24, 2024 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 25, 2024 - ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 26, 2024 - திங்கட்கிழமை - ஜென்மாஷ்டமி

From around the web