தோழிகளுடன் கள் குடிப்பதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பெண் அதிரடி கைது.. வைரல் வீடியோ!

 
kerala

கேரளாவில் கள்ளு கடைக்கு சென்ற பெண்கள் கள் குடிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் ஷர்பு பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சனா. இவர் தனது தோழிகளுடன் கண்டொலிகடவு பகுதியில் உள்ள கள்ளுக்கடைக்கு சென்றுள்ளார். அங்கு அஞ்சனா தனது தோழிகளுடன் சேர்ந்து கள் குடித்துள்ளார். 

பின்னர், அசைவ 'சைடிஸ்' உணவுகளுடன் தோழிகளுடன் சேர்ந்து கள் குடிப்பதை அஞ்சனா தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோவை எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Toddy

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் மதுபானத்தை குடிக்குமாறு சட்டவிரோதமாக விளம்பரம் செய்தாக வழக்குப் பதிவு செய்த கலால்துறை அதிகாரிகள் அஞ்சனாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இது குறித்து கலால் அதிகாரிகள் கூறுகையில், அவர் உண்மையில் கள் சாப்பிடவில்லை என்றும், சமூக ஊடகங்களில் இடுகையிடுவதற்காக ‘வீடியோ படப்பிடிப்புகளுக்கு’ மட்டுமே போஸ் கொடுத்தார் என்றும் கண்டறிந்தனர். அவர் சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார் மற்றும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார் என தெரிவித்தனர்.


மதுவிலக்கு பேரவை மாநில செயலாளர் ஜோசப் ஈ.ஏ, இந்த வீடியோ நடைமுறையில் கடையின் விளம்பரமாக மாறி வருவதால், தனது புகார் கள்ளுக்கடைக்கு எதிரானது என்றும், சட்டப்படி மதுக்கடைகள் அல்லது கள்ளுக்கடைகளில் எந்த விளம்பரமும் கொடுக்க முடியாது என்றும் புகார் அளித்துள்ளார்.

From around the web