மனைவிக்கு 3 முறை கருச்சிதைவு.. எதிர் வீட்டு சிறுமியை நரபலி கொடுத்த கணவன்..! கொல்கத்தாவில் பரபரப்பு

 
Kolkata

கொல்கத்தாவில் 7 வயது சிறுமியை நரபலி கொடுப்பதற்காகக் கொலைசெய்த சம்பவம் அப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

மேற்குவங்க மாவட்டம் கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீதர் ராய் சாலையில் வசித்து வந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணவில்லை. அவரின் பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்காததால், உடனே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் 7 வயது சிறுமியைத் தீவிரமாகத் போலீசார் தேடிவந்தனர். 

இந்த நிலையில், சிறுமி வசித்த வீட்டின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அலோக் குமார். அவரின் வீட்டை காவல் அதிகாரிகள் சோதனையிட்டதில், ஒரு சாக்கு மூட்டையிலிருந்து சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடனே சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு காவல்துறை அனுப்பிவைத்தது.

Kolkatta

மேலும், குற்றம்சாட்டப்பட்டவரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், உள்ளூர் மக்கள் தில்ஜாலா காவல் நிலையத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டதால், தெற்கு கொல்கத்தா போர்க்களமாக மாறியது. அதனால் ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன. அதனால் காவல் அதிகாரிகள் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கூட்டத்தைக் கலைத்தனர். சூழல் மோசமடைந்ததைத் தொடர்ந்து, விரைவு அதிரடிப்படையும் (RAF) பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், “அலோக் குமாரின் மனைவிக்கு மூன்று முறை கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது. இது மாதிரி அடிக்கடி நடப்பதால், பல்வேறு மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் அவருக்கு ஒரு மந்திரவாதி அறிமுகமாகியிருக்கிறார். அவரிடம் தன் குடும்பப் பிரச்னை குறித்து பேசியதும், ‘ஒரு குழந்தையை பலி கொடுத்தால் உனக்குக் குழந்தை கிடைக்கும்’ என்று கூறியிருக்கிறார். 

அதை நம்பியதால், அண்டை வீட்டுச் சிறுமியைக் கடத்தி கொலைசெய்திருக்கிறார். உடலை மந்திரவாதியிடம் எடுத்துச் செல்ல மூட்டைக் கட்டிவைத்திருந்ததாகவும் ஒப்புக்கொண்டிருக்கிறார். மேலும், விசாரணை நடந்துகொண்டிருக்கிறது" எனத் தெரிவித்திருக்கிறது.

From around the web