பகீர் வீடியோ.. டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார்.. ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேர் பலி..!

 
Andhra

ஆந்திராவில் அதிவேகமாக வந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் தேவாரப்பள்ளி பகுதியில் உள்ள துடுகுரு தேசிய நெடுஞ்சாலையில் விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரிக்குச் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென காரின் டயர் பஞ்சரானது. இதனால் நிலைதடுமாறிய கார், எதிர்புறச் சாலையில் பாய்ந்தது. அப்போது எதிர் திசையில் வந்த மற்றொரு கார்மீது மோதி, விபத்து ஏற்பட்டது.

Andhra

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து குறித்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு தேவாரப்பள்ளி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதில் காயமடைந்தவர்களுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், சிகிச்சைப் பலனளிக்காமல் 19 மாத குழந்தையான கனிஷ்கா பரிதாபமாக உயிரிழந்தார். மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்களது உடலைப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இதே பகுதியில், இதற்கு முன்னர் 2013-ம் ஆண்டு மே மாதம் கார் டயர் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

From around the web