பகீர் வீடியோ.. முக்கிய அரசியல் தலைவர் சுட்டுக்கொலை.. வீட்டிற்குள் புகுந்த கும்பல் வெறிச்செயல்!!

 
Rajasthan Rajasthan

ராஜஸ்தானில் ஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா தலைவர் சுகதேவ் சிங் கோகமெடி 3 பேர் கொண்ட கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொஹமெதி. இவர் ஸ்ரீ ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் லோகேந்திர சிங் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து பிரிந்து 2015-ம் ஆண்டு ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பு 2018-ம் ஆண்டு வெளியான பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தியது.  

இந்த நிலையில், சேர்ந்த ஸ்ரீ ராஷ்டிரிய ராஜ்புத் கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் இன்று ஜெய்ப்பூரின் ஷாய்ம் நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். அப்போது, அவரை சந்திக்க 3 பேர் வந்தனர். அந்த 3 பேரையும் வீட்டிற்குள் அழைத்த சுக்தேவ் சிங் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்களும் அங்கு இருந்தனர்.

gun

அப்போது, சுக்தேவ் சிங்கை சந்திக்க வந்தவர்களில் இருவர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுக்தேவ் சிங் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் சுக்தேவ் சிங் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்து உயிரிழந்தார். துப்பாக்கிச்சூட்டில் சுக்தேவ் சிங்கின் பாதுகாவலருக்கும் காயம் ஏற்பட்டது.

உடனடியாக சுதாரித்துக்கொண்ட சுக்தேவ் சிங்கின் பாதுகாவலர்கள் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் மீது குண்டு பாய்ந்து உயிரிழந்தார். ஆனாலும், தாக்குதல் நடத்தியவர்களில் எஞ்சிய 2 பேர் தப்பியோடினர்.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த 2 பேரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதேவேளை, சுக்தேவ் சிங்கை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web