பகீர் வீடியோ.. 78 கிமீ தூரம் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்.. பொதுமக்கள் அதிர்ச்சி!

 
Jammu

ஜம்மு காஷ்மீரில் 78 கிலோ மீட்டர் தூரம் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கதுவா ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6 - 7 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டது. சுமார் 78 கிலோ மீட்டர் தூரம் பயணித்த பிறகு, சரக்கு ரயில் பஞ்சாபின் கோஷியார்பூரில் உள்ள உச்சி பாஸ்சியை அடைந்ததாக கூறப்படுகிறது. அங்கு சரக்கு ரயில் வெற்றிகரமாக தடுத்து நிறுத்தப்பட்டது.

Jammu

இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இந்த சம்பவத்திற்கு பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரயில்வே பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க முழுமையான விசாரணை அவசியம் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.


இதனிடையே இது தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டு உள்ளதாக ஜம்மு ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாததால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்தனர்.

From around the web