தினந்தோறும் துரத்தி தொல்லை கொடுத்த வாலிபர்.. விபரீத முடிவு எடுத்த பள்ளி மாணவி!! உத்தர பிரதேசத்திரல் அதிர்ச்சி சம்பவம்

 
Murder

உத்தரப் பிரதேசத்தில் வாலிபர் ஒருவர் தினந்தோறும் துரத்தி தொல்லை கொடுத்ததால் பள்ளி மாணவி உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி வசித்து வந்தார். சமீப காலமாக இவருக்கு அப்பகுதியை சேர்ந்த பலேஷ்வர் யாதவ் என்ற வாலிபர் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த சிறுமி வெளியே செல்லும் போதெல்லம் பின்தொடர்ந்து துரத்தி தொல்லை கொடுத்துள்ளார். 

இது அந்த மாணவிக்கு பயத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. இளைஞரின் செயலுக்கு எதிராக மாணவி குரல் எழுப்பி கண்டிக்கவும் செய்துள்ளார். அப்போதெல்லாம், உண்ணை சும்மா விடமாட்டேன் என்று இளைஞர் பலேஷ்வர் மிரட்டல் விடுத்துள்ளார். சமீபத்தில் மாணவி 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 11 வகுப்பு சேர்ந்துள்ளார். 

Rape

இவர் தினந்தோறும் பள்ளிக்கு செல்லும் போதெல்லாம் இளைஞர் தொடர்ந்து பின்தொடர்ந்து துன்புறுத்தி வந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி நேற்று வீடு திரும்பியதும் அறைக்கு சென்று கதவை தாழிட்டுக் கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் மகள் வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து திறந்து பார்த்தனர்.

அப்போது தான் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு மாணவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். 

Police-arrest

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் பலேஷ்வர் யாதவை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web