சட்டையை மாத்திட்டு வரச் சொன்ன சபாநாயகர்! கனிமொழி எம்.பி. கண்டனம்!!

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் தொகுதி மறுவரையறை குறித்துப் பேச அனுமதி கேட்டு வருகின்றனர். ஆனால் இதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் பாராளுமன்ற வாசலில் #FairDelimitization என்ற பதாகை ஏந்தி போராட்டம் நடத்தினர். பின்னர் சால்வை, டி ஷர்ட்டில் இந்த வாசகங்களுடன் திமுக எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு வந்தனர். பாராளுமன்றத்தில் இத்தகைய உடைகள் அணிந்து வரக்கூடாது, வந்தால் அவை நடைபெறாது என்று சபாநாயகர் கூறி அவை நடவடிக்கைகளை நிறுத்தி விட்டார். உடையை மாற்றிக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்.
மதியம் அவை கூடியதும் மீண்டும் அதே உடைகளுடன் சென்ற போதும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. முன்னதாக இத்தகைய எதிர்ப்பு ஆதரவு வாசகங்களுடன் உடை, மாஸ்க் அணிந்து வந்த போதெல்லாம் சபாநாயகர் அனுமதித்துள்ளார். எங்களை மட்டும் அனுமதிக்க மறுத்துள்ளார் என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். எதிர்க்கட்சியினரே இல்லாமல் அவையை நடத்துவதற்குத் தான் பாஜக விரும்புகிறது.
தொடர்ந்து தொகுதி மறுவரையறை குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதற்கு போராடுவோம் என்றும் கனிமொழி கூறியுள்ளார்.