‘ஐ லவ் யூ’ சொன்ன கடை ஓனர்.. பளார் பளார் என அறைந்த மாணவிகள்.. வைரல் வீடியோ

 
Rajasthan Rajasthan

ராஜஸ்தானில் ‘ஐ லவ் யூ’ என கூறிய செல்போன் கடை உரிமையாளரை, மாணவிகளே தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் திட்வானா நகரில் இளைஞர் ஒருவர் செல்போன் கடை வைத்துள்ளார். இந்த கடையில் செல்போன் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்வதுடன், மொபைல் ரீசார்ஜும் செய்யப்படுகிறது. கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளரிடம் அதன் உரிமையாளர் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை யாரும் பெரிதுபடுத்தாமல் விட்டதால், அந்த நபர் தனது சீண்டல்களை தொடர்ந்துள்ளார். 

Rajasthan

இந்த சூழலில் செல்போன் கடைக்கு, மாணவிகள் சிலர் செல்போன் ரீசார்ஜ் செய்ய சென்றுள்ளனர். அப்போது, அந்த நபர் அந்த மாணவிகளிடம் தனது அத்துமீறலை அரங்கேற்றியுள்ளார். அத்துடன் மாணவி ஒருவரிடம் ‘ஐ லவ் யூ’ எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவிகள், அவரை வெளியே இழுத்து வந்து அடித்து உதைத்தனர். ‘ஐ லவ் யூ’ என கூறியதுடன் முத்தமும் கேட்டதால் வெகுண்டெழுந்த மாணவிகள், அந்த இளைஞரின் கன்னத்தில் பளார் பளார் என அறைந்தனர்.

திருடனுக்கு தேள் கொட்டியது போன்று, தனது குட்டு அம்பலமானதால், எதுவும் செய்ய முடியாமல் கஸ்டமர்கள் இலவசமாக கொடுத்த அறையை மாறி மாறி வாங்கிக் கொண்டிருந்தார் அந்த உரிமையாளர். அங்கிருந்த இளைஞர்கள் செல்போன் கடை உரிமையாளரை பிடித்துக் கொண்டதும், மாணவிகள் ரவுண்ட்டு கட்டி அடித்து உதைத்தனர். வாடிக்கையாளரிடம் வம்பிழுத்து வாங்கிக் கொண்ட இளைஞர், போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டார்.


அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்ட செல்போன் கடை உரிமையாளரை, மாணவிகளே அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் திட்வானா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

From around the web