இடிந்து விழுந்த ஸ்டேடியம் மேற்கூரை.. 3 பேர் உடல்நசுங்கி பலி.. தெலுங்கானாவில் அதிர்ச்சி!

 
Telangana

தெலுங்கானாவில் கட்டுமானத்தில் இருந்த உள்விளையாட்டு அரங்கம் இடிந்து விழுந்ததில், 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மொயினாபாத் அருகே இருக்கும் கனகமாமிடி கிராமத்தில் டேபிள் டென்னிஸ் அகாடமியின் உள்விளையாட்டு அரங்கம் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. இன்றும் வழக்கம்போல் பணிகள் நடைபெற்ற நிலையில் அங்கு 14 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Telangana

அப்போது கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையே 12 தொழிலாளர்கள் சிக்கி கொண்ட நிலையில் அவர்களில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்சை வரவழைத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். உள்விளையாட்டு அரங்கம் மேற்கூரை இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்தர் நகர் துணை போலீஸ் கமிஷனர் ஜெகதீஷ்வர் ரெட்டி கூறுகையில், கனகமாடி பகுதியில் காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் 3 உடல் மீட்கப்பட்டது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.

From around the web