மான்குட்டியை விழுங்கிய மலைப்பாம்பு.. மீட்க போராடிய மக்கள்.. வைரல் வீடியோ!

 
Himachal Pradesh

இமாசல பிரதேசத்தில் மலைப்பாம்பு ஒன்று மான் குட்டியை பிடித்து விழுங்கிய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இமாசல பிரதேச மாநிலம் உனா மாவட்டத்தில் பைத்தான் வகை மலைப்பாம்பு ஒன்று மான் குட்டியை பிடித்து விழுங்கி விட்டது.  இதனை பார்த்த உள்ளூர்வாசிகள் சிலர், மான் குட்டியை மீட்கும் நோக்கில் செயல்பட்டனர். இதுகுறித்து வீடியோ ஒன்று இந்திய வனப்பணி அதிகாரி பர்வீன் கஸ்வான் என்பவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

Himachal pradesh

அதில், மலைப்பாம்பு விழுங்கியிருந்த மான் குட்டியை மீட்க சிலர் முயற்சிக்கின்றனர். இதனை பகிர்ந்திருந்த அவர், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இயற்கை உலகில் இதுபோன்று தலையிடுவது சரியா? அல்லது அவர்கள் சரியான செயலைதான் செய்கிறார்களா? என்று கேள்வி ஒன்றையும் கேட்டுள்ளார்.


இதுபற்றி விமர்சன பகுதியில் சூடான விவாதம் ஓடிக்கொண்டிருக்கிறது. புளூ புல் வகையை சேர்ந்த இந்த மான் இனம், வனவாழ் பாதுகாப்பு சட்டத்தின்படி, பாதுகாக்கப்பட்ட பட்டியலில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை வேட்டையாடுவது சட்டவிரோதம் ஆகும். இந்த வீடியோவை 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் லைக் செய்துள்ளனர்.

From around the web