கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய தனியார் பேருந்து.. கேரளாவில் பரபரப்பு.. வைரல் வீடியோ

 
Kerala

கேரளாவில் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த தனியார் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்து தடுப்பு சுவரில் மோதிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தின் பாலக்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தனியார் பேருந்து ஒன்று அங்குள்ள பிரதான சாலையில் இருபதுக்கு மேற்பட்ட பயணிகளுடன் வேகமாக சென்றது. 

Kerala

அப்போது, திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புச் சுவரில் அதிக வேகத்தில் மோதியது. உடனே பேருந்து ஓட்டுநர் அருகில் உள்ள பள்ளத்தில் விழாமல் பேருந்தை சாமார்த்தியமாக செயல்பட்டு மீண்டும் சாலைக்கு கொண்டு வந்தார்.


இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார். உடனே பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மரண பீதியில் அவசர அவசரமாக முண்டியடித்துக் கொண்டு கீழே இறங்கினர். இதற்கிடையே இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web