இளைஞரின் பிறப்புறுப்பை கடித்து குதறிய பிட்புல் நாய்.. ஆத்திரத்தில் ஊர்மக்கள் அடித்து கொன்ற சோகம்!!

 
Karnal

அரியானவில் 30 வயது நபரின் அந்தரங்க உறுப்பை நாய் கடித்த குதறிய பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தின் பிஜ்னா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கரண் சர்மா (30). விவசாயம் செய்து வரும் இவர் வழக்கம் போல தனது வயலுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது தெருவில் சுற்றித் திரிந்த பிட்புல் வகை நாய் ஒன்று கரணை நோக்கி பாய்ந்துள்ளது.

Private parts

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கரண், நாய்யை குச்சி மூலம் அடித்து விரட்ட முயன்றுள்ளார். அப்போது அந்த நாய் அவரது அந்தரங்க உறுப்பை கடித்து தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த கரணை அப்பகுதி மக்கள் மீட்டு கர்னல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். 

அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நாய் சுமார் ஒருவார காலமாகவே அங்கு திரிந்து கொண்டிருந்ததாகவும், இந்த நாயிடம் ஏற்கனவே ஒரு ஊர்காரர் கடிபட்டுள்ளதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர். 

Police-arrested

கரண் தாக்கப்பட்ட சம்பவத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த நாய்யை கம்பால் அடித்து கொன்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கரண் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web