பாஜக ஆட்சியில் தனிநபர் வருமானம் இரட்டிப்பாகவில்லையே!! ப.சிதம்பரம் கவலை!!

 
Chidambaram

கடந்த வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம், "நாம் இப்போது 4 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்துள்ளோம். இது எனது தரவுகள் இல்லை. சர்வதேச நாணய நிதியத்தின் தரவுகள். இந்தியா இப்போது ஜப்பானை விட பெரியது. அமெரிக்கா, சீனா மற்றும் ஜெர்மனி மட்டுமே இப்போது நமக்கு முன்னாள் உள்ளன. திட்டமிட்டு சிந்திக்கப்படுவதில் நாம் உறுதியாக இருந்தால் இன்னும் 2 - 3 ஆண்டுகளில் நாம் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறுவது பெரிய விஷயம் இல்லை." என்று தெரிவித்தார்

இந்நிலையில் நிதி ஆயோக் தலைமை அதிகாரி முழுமையான தகவல்களைச் சொல்லவில்லை என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதமபரம் கூறியுள்ளார். எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம்,

“இந்தியாவின் தனிநபர் வருமானம் 2013-14-ஆம் ஆண்டில் 1438 அமெரிக்க டாலர்களிலிருந்து 2024-இல் 11 ஆண்டுகளில் 2880 அமெரிக்க டாலர்களாக இரட்டிப்பாகியுள்ளது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பொதுவாகப் பார்க்கும்போது அவர் சொன்னது சரிதான், நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இருப்பினும், அவர் முழு தகவல்களையும் கொடுத்திருக்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இந்தியாவில் தனிநபர் வருமானம் என்பது 2003-ல் USD 543 ஆகவும், 2013ல் USD 1438 ஆகவும் இருந்தது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனிநபர் வருமானம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியது. உண்மையில் இது 2.64 மடங்கு.

2023-ல் இந்தியாவின் தனிநபர் வருமானம் USD 2711 ஆகவும், 2024-ல் USD 2878 ஆகவும் இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்தின் கீழ், தனிநபர் வருமானம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகவில்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

From around the web