தந்தையை கம்பியால் அடித்த கும்பல்.. வேண்டாம்.. வேண்டாம் கதறிய மகன்.. பகீர் வீடியோ!!

 
Punjab

பஞ்சாப்பில் தனது மகனை பள்ளிக்கு விட வந்த தந்தையை தடியைக் கொண்டு 6 பேர் கொண்ட கும்பல் தாக்கி கொலை செய்ய முயற்சி செய்யும் அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.

பஞ்சாப் மாநிலம், மான்சா பகுதியில் 6 வயது மகனை பள்ளியில் விடுவதற்காக அவனது தந்தை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார். அப்போது பின்தொடர்ந்து சென்ற சிலர், அவரை தடுத்து நிறுத்தி சட்டையை பிடித்து கீழே இழுத்தனர். ஏற்கனவே அந்த இடத்தில் இருந்த மற்ற சிலரும் சேர்ந்து, சிறுவன் முன்பாகவே தந்தையை கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர்.

murder

அப்போது ஒருவர் அந்த சிறுவனை வாகனத்தில் இருந்து இறக்கி விடுகிறார். அடிபட்டு கீழே விழுந்த அவனது தந்தையைச் சுற்றி வளைத்து அந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்துகிறது. இதனால் செய்வதறியாது அந்த சிறுவன் அழுது கொண்டிருக்கிறான்.

அப்போது ஒரு பெண், தாக்குதல் நடத்துபவர்களிடம் இருந்து அடிபடுபவரை மீட்க முயற்சி செய்கிறார். ஆனால், அடிபட்டவரை தரையில் இழுத்துச் சென்று மீண்டும் அந்த கும்பல் நையப்புடைத்து விட்டு தப்பிச் செல்கிறது. பஞ்சாப்பில் பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


இச்சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது ஐபிசி 307 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர். காயமடைந்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தனிப்பட்ட விரோதம் காரணமாக தாக்குதல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.

From around the web