பலத்த சத்தத்துடன் விழுந்து நொறுங்கிய மிக்-21 போர் விமானம்! பொதுமக்கள் 3 பேர் பலி.. ராஜஸ்தானில் பயங்கரம்!!

 
Rajasthan

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் முதல் மிக் 21 ரக விமானத்தை 1963-ம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவிடம் இருந்து பெற்றது. ஒட்டுமொத்தமாக 874 யூனிட்டுகள் மிக் 21 போர் விமானங்கள் இந்திய விமானப் படையின் பயன்பாட்டிற்காக வாங்கப்பட்டன. ஆனால், இப்போது 50க்கும் குறைவாகவே இந்த விமானங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன.

இந்நிலையில் இன்று இந்த விமானத்தில் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளது. அதாவது இந்த விமானம் இன்று காலை சூரத்கரிலிருந்து புறப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியில் பொதுக்கள் வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. 

Rajasthan

இந்த விபத்தில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும், விமானி அதிர்ஷடவசமாக உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விமான விபத்து குறித்து விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. விமான விபத்தால் பொதுமக்கள் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக போர் விமானங்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தானின் பரத்பூரில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சுகோய் சு-30 மற்றும் மிராஜ் 2000 விமானங்கள் விபத்தில் சிக்கியது. இதில் ஒரு விமானி பரிதாபமாக உயிரிழந்தார். 


இந்த இரண்டு விமானங்களும் மிகவும் சக்திவாய்ந்த விமானங்களாகும். இந்த போர் விமானமும் ரஷ்யாவிடமிருந்து வாங்கியதுதான். ஆனால் இது இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பின்நாட்களில் ரஷ்யாவுடன் இணைந்து தனித்துவமிக்க இந்திய சூழலுக்கு ஏற்ற சுகோய் போர் விமானங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

From around the web