முதலாளி குடும்பத்தினருக்கு சிறுநீர் கலந்த உணவு செய்த பணிப்பெண்.. பகீர் வீடியோ

 
Uttar Pradesh

உத்தர பிரதேசத்தில் ஒரு வீட்டில் சமையல் வேலைச் செய்யும் பெண் ஒருவர் அந்த வீட்டின் பாத்திரத்தில் சிறுநீர் கழித்து, சிறுநீரை மாவுடன் சேர்த்து பிசையும் வீடியோ வெளியாகி பகீர் கிளப்புகிறது. 

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் தொழில் அதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினருக்கு கடந்த சில நாட்களாக கல்லீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்ற நிலையிலும் சரியாகவில்லை. இதனால் சமையல் செய்யும் பணிப்பெண் சாப்பாட்டில் எதாவது கலந்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்தது. இதை கண்டுபிடிப்பதற்காக செல்போனில் கேமராவை ஆன் செய்து சமையல் அறையில் மறைத்து வைத்திருந்தார்.

Uttar Pradesh

அப்போது சமையல் வேலையும் செய்யும் பெண் சமையல் அறையில் ஒரு பாத்திரத்தில் சிறுநீர் கழிக்கிறார். சிறிது நேரம் கழித்து அதே பாத்திரத்தில் சமையல் செய்கிறார். இந்த வீடியோவை பார்த்து தொழில் அதிபர் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த சமையல் பணிப்பெண் 8 வருடமாக வேலை செய்து வருகிறார். இருந்த போதிலும் முதலாளிக்கு எதிராக இப்படி ஒரு அருவருப்பான வேலையை செய்துள்ளார்.

இதனால் அந்த தொழில் அதிபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். முதலில் குற்றச்சாட்டை மறுத்த அந்த பணிப்பெண், வீடியோவை காண்பித்ததும் அமைதி காத்தார். இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்கள் குறித்து நெட்டிசன்கள் தங்கள் வெறுப்பையும் அச்சத்தையும் வெளிப்படுத்தினர். பலர் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க கடுமையான சட்டங்களை வகுக்க வேண்டும் என்றனர். 


‘இது அருவருப்புக்கு அப்பாற்பட்டது. அத்தகைய நபர்களுக்கு கடுமையான தண்டனை தேவை’ என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்த நிலையில், ‘வீட்டு உதவியாளர் மீதான நம்பிக்கை உடைந்து விட்டது. மக்கள் எப்படி இப்படி காட்டிக் கொடுக்க முடியும் என்று பயமாக இருக்கிறது’ என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார். 

From around the web