பாத்திரத்திற்குள் தலையை விட்டு சிக்கி கொண்ட சிறுத்தை.. 5 மணி நேரத்திற்கு பிறகு மீட்ட வனத்துறையினர்.. பரபரப்பு வீடியோ!
மகாராஷ்டிராவில் பாத்திரத்திற்குள் தலையை விட்டு 5 மணி நேரம் சிக்கி தவித்த சிறுத்தையை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் துறை கடந்த பிப்ரவரி 29-ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 13,874 சிறுத்தைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மத்திய பிரதேசத்தில் 3,907 சிறுத்தைகள் உள்ளன. இது தவிர மகாராஷ்டிரா (1,985), கர்நாடகா (1,879) மற்றும் தமிழ்நாடு (1,070) ஆகிய மாநிலங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான சிறுத்தைகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் துலே மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்குள் நேற்று சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. கிராமத்திற்குள் சுற்றித் திரிந்த சிறுத்தை, ஒரு உலோக பாத்திரத்திற்குள் தனது தலையை விட்டுள்ளது. ஆனால் அந்த பாத்திரத்தில் இருந்து சிறுத்தையால் அதன் தலையை விடுவிக்க முடியவில்லை.
#WATCH | Maharashtra: A male leopard spent five hours with its head stuck in a metal vessel in a village in Dhule district was later rescued by the Forest Department: RFO Savita Sonawane
— ANI (@ANI) March 3, 2024
(Video Source: Forest Department) pic.twitter.com/PojOWOCoRd
அந்த சிறுத்தை சுமார் 5 மணி நேரமாக பாத்திரத்திற்குள் தலையை விட்டு சிக்கித் தவித்துள்ளது. இதனிடையே இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்ததோடு அதன் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தையும் அகற்றினர்.