ஓடுபாதையில் இருந்து சறுக்கி இரண்டாக உடைந்த ஜெட் விமானம்.. மும்பை ஏர்போர்ட்டில் பரபரப்பு!

 
Mumbai

மும்பை விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி விபத்துக்குள்ளான சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து மும்பைக்கு விஎஸ்ஆர் வென்ச்சர்ஸ் நிறுவனத்தினால் இயக்கப்படும் லியர்ஜெட் 45 விமானம் வந்தது. 9 இருக்கைகள் கொண்ட இந்த விமானம் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து சறுக்கி சென்று விபத்திற்குள்ளானது. விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமான சிப்பந்திகளும் இருந்தனர்.

Mumbai

இந்த விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மும்பை விமான நிலையத்தில் கடுமையான மழை பெய்து வந்ததும், இந்த விபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ஜெட் விமானத்தில் தீ பற்றியது. எனினும், மீட்பு படையினர் விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.

விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதையில் இருந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டு, முறையான பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைவு பெற்று, அதனை தேசிய விமான போக்குவரத்துத்துறை உறுதிப்படுத்திய பிறகே ஓடுபாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. 


இந்த விபத்து மும்பை விமான நிலையத்தின் 27-வது ஓடுபாதையில் ஏற்பட்டது. மழை காரணமாக பாதையில் வழுவழுப்பாக இருந்ததும், 700 மீட்டர்கள் வரை பார்க்கக்கூடிய நிலை இல்லை என்று கூறப்படுகிறது. விபத்தை தொடர்ந்து ஓடுபாதையில் மற்ற விமானங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக கிட்டத்தட்ட ஐந்து விமானங்கள் மற்ற ஓடுபாதை வழியாக கிளம்பி சென்றன.

From around the web