மணமேடையில் இருந்து எஸ்கேப் ஆன மாப்பிள்ளை.. 20 கிமீ துரத்தி சென்று பிடித்த மணமகள்!!

 
UP

உத்திரபிரதேசத்தில் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்த சில மணி நேரத்தில் மணமகன் திருமண மண்டபத்திற்கு வராமல் ஓட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பதான் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். கடந்த இரண்டரை வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு இரு வீட்டாராலும் பல சவால்களை எதிர்கொண்டனர். ஒருவழியாக இருவீட்டாரும் கலந்தாலோசித்து திருமணத் தேதியை முடிவு செய்தனர். 

Groom

அதன்படி கடந்த ஞாயிறுக்கிழமை அன்று பூதேஸ்வர் நாத் கோவிலில் திருமணம் நடத்துவதாக இருந்தது. ஆனால், திருமண நாளன்று வெகு நேரமாகியும் திருமண மேடைக்கு மணமகன் வரவில்லை. மணக்கோலத்தில் பெண் காத்திருக்க போனில் மணமகன் சாக்குப்போக்கு கூறி தட்டிக் கழிப்பதுபோல் பேசியுள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த மணப்பெண் சற்றும் தாமதிக்காமல் பேருந்து நிலையத்துக்குப் புறப்பட்டார். உடனே மணமகள் மணமகனை பரேலியில் இருந்து சுமார் 20 கி.மீ தூரம் துரத்தி சென்று பீமோரா காவல் நிலையம் அருகே உள்ள பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த மணமகனை கண்டுபிடித்து உள்ளார்.

Marriage

பேருந்து நிலையம் என்றும் பாராமல் சண்டை போட்ட மணப்பெண் அவரை வலுக்கட்டாயமாக மண்டபத்துக்கு இழுத்துச் சென்றார். பிமோரா கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் பரவ சிலர் கங்கனா ரனாவத் நடித்த குயின் படத்தை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர்.

From around the web