நண்பர்களுடன் சேர்ந்து காதலனை கடத்திய காதலி.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து சித்திரவதை!! கேரளாவில் பகீர் சம்பவம்

 
Kerala Kerala

கேரளாவில் கல்லூரி மாணவனை காதலி நண்பர்களோடு சேர்ந்து கடத்தி சென்று நிர்வாணமாக்கி சித்திரவதை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வர்க்கலா ஆயிரூர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அபிராம். இவரும் அதே பகுதியை சேர்ந்த லட்சுமி பிரியா என்பவரும் பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் லட்சுமி பிரியா எர்ணாகுளம் பகுதியில் உள்ள கல்லூரியில் இளங்கலை படிப்பதற்காக சேர்ந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த வேறு ஒரு இளைஞருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தனது காதலில் உறுதியாக இருந்த மாணவர் தொடர்ந்து லட்சுமி பிரியாவை பின் தொடர்ந்துள்ளார்.

Lakshmipriya

இதனால் விரக்தியடைந்த லட்சுமி பிரயா முதல் காதலனை பழிவாங்க வேண்டும் என திட்டமிட்டுள்ளார். அதன்படி, அபிராமிடம் நைசாக பேசி வரவழைத்து சில இளைஞர்களோடு சேர்ந்து அபிராமை காரில் கடத்திச் சென்றுள்ளார்.

பின்னர் எர்ணாகுளம் அருகே ஆள் இல்லாத வீட்டிற்குள் அடைத்து வைத்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்து வீடியோ பதிவு செய்துள்ளனர். மேலும் அபிராமிடம் இருந்து கைக்கடிகாரம் ரொக்கப்பணம் ஐந்தாயிரத்து ஐநூறு ரூபாய் தங்க சங்கிலி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.

Police-arrest

அதன்பின் எர்ணாகுளம் அருகே அபிராமை காரிலிருந்து தள்ளிவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது. இது தொடர்பாக அபிராம் அளித்த புகாரின் பேரில் லட்சுமி பிரியா மற்றும் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு, அக்கும்பலை சேர்ந்த எர்ணாகுளம் அமல் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் லட்சுமி பிரியா உள்ளிட்டோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

From around the web