காதலனை மாற்றிய பெண்.. தாய், மகன் கொடூர கொலை.. பெங்களூருவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Bengaluru

கர்நாடாகவில் தாயும், மகனும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதா (35). இவருக்கும் கர்நாடக மாநிலம், பகலகுண்டே, ரவீந்திரநாதா குடே பகுதியை சேர்ந்த சந்துரு என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியின் மகன் ஸ்ருஜன் (8). நவநீதா பெங்களூருவில் உள்ள கால் சென்டரில் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், எலெக்ட்ரீசியனாக பணிபுரியும் சேகர் என்பருடன் நவநீதாவிற்கு திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த சந்துரு, நவநீதாவை பிரிந்தார். இதனால் கடந்த 2 ஆண்டுகளாக சேகருடன் நவநீதா சேர்ந்து வாழ்ந்து வந்து வந்தார்.

இதற்கிடையில் லோகேஷ் என்ற வாலிபருடன் நவநீதாவுக்குத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. சேகர் இல்லாத போது வீட்டிற்கு லோகேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதுகுறித்து சேகரிடம், அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர், உறங்கிக் கொண்டிருந்த நவநீதாவை கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

Murder

இதனால் வலியால் நவநீதா துடித்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த நவநீதாவின் மகன் ஸ்ருஜன், உதவி கோரி சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர், ஸ்ருஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். இதன் பின் வீட்டை பூட்டி விட்டு சேககர் தலைமறைவானார்.

இந்த நிலையில் நீண்ட நேரம் ஆகியும் தாயும், மகனும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அங்கு நவநீதா, சந்துரு இருவரும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.

Police-arrest

இதையடுத்து இருவரது பிணத்தையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் சந்துருவை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தனக்கும், இந்த கொலைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என சந்துரு கூறினார்.

இதனால் போலீசார், நவநீதாவுக்கு வந்த போன் அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது சேகர் அவருடன் தொடர்பில் இருப்பதும், கொலை நடப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு அவரைத் தொடர்பு கொண்டு பேசியதும் தெரிய வந்தது. இதையடுத்து சேகரை போலீசார் இன்று கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web