மலை உச்சிக்கு நண்பருடன் சென்ற சிறுமி.. கூட்டு பாலியல் பலாத்காரம்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

 
Rape

கர்நாடகாவில் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என அச்சுறுத்தி சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் சித்தகங்கா மடத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா இந்த வருடமும் நடந்துள்ளது. அதன்படி, கடந்த 4-ம் தேதி இந்த விழாவுக்கு சிறுமி ஒருவர் தன்னுடைய நண்பருடன் பங்கேற்க சென்றுள்ளார்.

rape

அதன்பின்னர், அருகே உள்ள மலை உச்சிக்கு நண்பருடன் சென்று அமர்ந்து, பேசியபடி இருந்துள்ளார்.  இதனை, அவர்களை பின்தொடர்ந்து வந்த 3 பேர் கவனித்து உள்ளனர். அவர்கள் இருவரையும் வீடியோவாக எடுத்து, அவர்களிடம் சென்று மிரட்டியுள்ளனர்.  

இந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிட்டு விடுவோம் என அச்சுறுத்தி உள்ளனர்.  இதனால், அவர்கள் பயந்து போயுள்ளனர். இதனை பயன்படுத்தி, அந்த சிறுமியை பந்திபாளைய பகுதிக்கு தனியாக இழுத்து சென்று 3 பேரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

arrest

இந்த சம்பவம் குறித்து சிறுமி, போலீசில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, 3 இளைஞர்களை கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.

From around the web