டிராக்டரை எடுத்து செல்ல வந்த பைனான்சியர்.. சாமியாடி மீட்ட பெண்.. வைரலாகும் வீடியோ
நிதி நிறுவன ஊழியர்களிடம் இருந்து டிராக்டரை காப்பாற்ற போலியாக சாமியாடும் பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு ஏழை விவசாய குடும்பத்தினர், கடனாக டிராக்டர் வாங்கியதாக தெரிகிறது. கடன் தொகையை சரிவர கட்டாததால் நிதி நிறுவன ஊழியர்கள் சிலர் டிராக்டரை எடுத்துச் செல்ல வந்துள்ளனர்.
இதை அறிந்த விவசாயி குடும்பத்து இளம்பெண் திடீரென சாமி வந்ததுபோல ஆடத் தொடங்கினார். அவர் கைகளில் குங்குமத்தை பூசிக் கொண்டு, நிதி நிறுவன ஊழியர்களை நோக்கி, வண்டியை எடுக்காதே, எடுத்தால் மோசமான விளைவுகளை சந்திப்பாய் என்று சாபமிட்டாள்.
வண்டியை நான் எடுத்துச் செல்லாவிட்டால், என் வேலை போய்விடும் என்று அந்த ஊழியர் பேசும் குரலும் பதிவாகி உள்ளது. வலைத்தளவாசிகள் இந்த வீடியோவை சிரித்தபடி ரசித்து செல்கிறார்கள். இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இதை ரசித்துள்ளனர்.