தம்பியுடன் ஏற்பட்ட சண்டை... ஆத்திரத்தில் செல்போனை விழுங்கிய பெண்.. மருத்துவர்கள் அதிர்ச்சி.!

 
MP

மத்தியப் பிரதேசத்தில் சகோதரர் உடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் ஒருவர் செல்போனை விழுங்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு ஒரு தம்பி உள்ளார். இவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. சிறுபிள்ளைத்தனமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டு கொள்வதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 31) அந்த இளம்பெண்ணுக்கும், அவரது சகோதரருக்கும் இடையே மீண்டும் சண்டை ஏற்பட்டது. 

Surgery

வாக்குவாதத்தில் கோபமடைந்த பெண், வீட்டில் இருந்த சீன மாடல் செல்போனை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் வீட்டார், பதறிப்போய் மருத்துவமனைக்கு  அழைத்து சென்றனர். ஆனால் பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி, வாந்தி இருந்துள்ளது. தொடர்ந்து பெண்ணை குவாலியர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு மூத்த மருத்துவர் பிரசாந்த் ஸ்ரீவத்சவா தலைமையிலான மருத்துவ குழு ஆல்ட்ரா சவுன்ட், எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் போன்ற பரிசோதனை நடத்தினர். என்டோஸ்கோபி, லேப்ரோஸ்கோபி போன்றவற்றின் மூலம் செல்போனை எடுக்க முடியுமா என்று முயன்று, அதில் தோல்வி அடைந்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலம் செல்போனை எடுக்க முடிவெடுத்தனர்.

Mobile

சுமார் இரண்டு மணிநேரம் மருத்துவர்கள் பெண்ணின் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக செல்போனை அகற்றினர். தங்கள் 20 ஆண்டுகால மருத்துவ வரலாற்றில் இது போன்ற ஒரு சம்பவத்தை வாழ்நாளிலேயே சந்தித்து இல்லை எனக் கூறிய மருத்துவர்கள், சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டது திருப்தி அளிப்பதாக கூறினர். பெண்ணின் வயிற்றில் 20 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், அவர் ஓய்வில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறினர்.  விரைவில் பெண் முழு நலமடைந்து வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web