உயிரிழந்த மனைவி.. சடலத்தை 3 நாட்கள் ஃப்ரீசரில் வைத்திருந்த கணவன்.. பரபரப்பு சம்பவம்..!

 
MP

மத்திய பிரதேசத்தில் உயிரிழந்த மனைவியின் உடலை வீட்டின் ஃப்ரீசரில் கணவர் வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ராவே மாவட்டத்தின் கோட்வாலி பகுதியில் வசித்து வருபவர் பரத் மிஸ்ரா. இவரது மனைவி சுமித்ரி (40). இவர், கடந்த ஜூன் 30ம் தேதி உயிரிழந்த நிலையில், இந்த மரணத்தை கணவர் பரத் ரகசியமாக சில நாள்கள் மறைத்து வைத்தது தான் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. மனைவி உயிரிழந்ததை தெரிவிக்காமல் கணவர் பரத் உடலை வீட்டின் பிரீசரில் கடந்த 3 நாள்களாக வைத்துள்ளார். 

crime

இந்த நிலையில், சுமித்ரியின் சகோதரர் அபத் திவாரிக்கு சந்தேகம் ஏற்படவே போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் பரத் திவாரி வீட்டிற்கு வந்த போலீசார் நடத்திய சோதனையில் பெண்ணின் உடல் ஃப்ரீசரில் இருந்தது தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தனது சகோதரியின் மரணத்தை கணவர் பரத் மறைத்து வைத்ததாக புகார் தெரிவித்துள்ள அபய், மாப்பிள்ளை தாக்கியதில் தான் சகோதரி மரணமடைந்ததாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். தனது மனைவி மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்ததாக கணவர் பரத் கூறியுள்ளார். தனது மகன் மும்பையில் வேலை பார்த்து வருவதாகவும், இறுதி சடங்கிற்கு மகன் வரவேண்டும் என்பதற்காவே உடலை ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்தேன் என்ற வாக்குமூலம் தெரிவித்துள்ளார்.

Police

சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பிரேத பரிசோதனை முடிவுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது. முடிவில் பெண்ணின் மரணத்திற்கான காரணம் வெளியான பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் ஆய்வாளர் விஜய் சிங் கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web