80 ரூபாயில் தொடங்கப்பட்ட அப்பள நிறுவனம்.. ஆண்டு வருமானம் ரூ.1,600 கோடி..!

 
Lijjat Papad Lijjat Papad

80 ரூபாயில் 7 பெண்களால் தொடங்கப்பட்ட ஒரு அப்பள நிறுவனம், இன்று ரூ.1,600 கோடி மதிப்பில் 45 ஆயிரம் பெண்களால் வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகிறது

1959-ம் ஆண்டு மும்பையில் உள்ள கிர்கவும் பகுதியில் 7 பெண்கள் சேர்ந்து ரூ.80 முதலீட்டில் அப்பள கம்பெனியைத் தொடங்கினர். ஜஸ்வந்திபென் ஜாம்னாதாஸ் போபத், பார்வதிபென் ராமதாஸ் தோடானி, உஜெம்பென் நரன்தாஸ் குன்டாலியா, பானுபென் என் டன்னா, லகுபென் அமிர்தலால் கோகனி, ஜெயாபென் வி விதாலனி, தில்வாலிபென் லுகா ஆகிய பெண்கள் சேர்ந்துதான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினர். சமூக சேவகர் சாக்னாலால் கரம்சி பரேக் என்பவரிடம் இருந்து 80 ரூபாய் பெற்று அப்பளத்துக்கான மூலப்பொருட்களை வாங்கினர்.

அப்பளம் தயார் செய்த முதல்நாளில் 4 பாக்கெட்டுகள் மட்டும்தான் விற்பனையாகின, முதல் ஆண்டில் 6 ஆயிரம் பாக்கெட்டுகள் விற்றன. இதையடுத்து, 1962-ம் ஆண்டு தங்கள் அப்பளத்தை லிஜ்ஜத் என்ற பெயரிட்டு விற்பனை செய்யத் தொடங்கி, அதற்கு பரிசுக் கூப்பனை அறிமுகம் செய்தனர். அந்த நேரத்தில் லிஜ்ஜத் அப்பளம் ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.

Papad

மெல்ல மெல்ல வளர்ந்த லிஜ்ஜத் நிறுவனத்தில் படிப்படியாக பெண்கள் சேர்ந்து பணியாற்றத் தொடங்கி, அவர்களும் சக உரிமையாளர்களாக மாறினர். இந்த லிஜ்ஜத் அப்பளத்தைப் பற்றி அறிந்த ஊடகங்கள் வெளிச்சம் பாய்ச்சவே வேகமாக நிறுவனம் வளரத் தொடங்கியது. கடந்த 60 ஆண்டுகளில் லிஜ்ஜத் அப்பள நிறுவனம் 2002-ம் ஆண்டில் 42 ஆயிரம் பெண்கள் வேலைபார்க்கும் நிறுவனமாகவும், 2021ம் ஆண்டில் 45 ஆயிரம் பெண்கள் வேலைபார்க்கும் நிறுவனமாகவும் மாறியது. 

தற்போது லிஜ்ஜத் நிறுவனத்துக்கு நாடுமுழுவதும் 82 கிளைகள் உள்ளன, அமெரிக்கா, சிங்கப்பூருக்கு அப்பளங்களை லிஜ்ஜத் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது. அப்பளம் மட்டுமல்லாமல் சலவை சோப், ரொட்டி தயார் செய்தும் விற்பனை செய்து வருகிறது.

Papad

வெறும் 80 ரூபாயைக் கொண்டு, 7 பெண்களால் தொடங்கப்பட்ட நிறுவனம், 60 ஆண்டுகளில் ரூ.1,600 கோடி முதலீடு மிக்க நிறுவனமாக வளர்ந்துள்ளது. ஏறக்குறைய 45 ஆயிரம் பெண்கள் பணியாற்றுகிறார்கள், நாள்தோறும் 48 லட்சம் அப்பளங்கள் தயார் செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.

From around the web