வாலிபர் வயித்துக்குள்ள உயிரோடு இருந்த கரப்பான்பூச்சி.. டெல்லியில் பரபரப்பு

டெல்லியை சேர்ந்த வாலிபரின் வயிற்றிலிருந்து உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தலைநகர் டெல்லியை சேர்ந்த 23 இளைஞர் ஒருவர் சாலையோர உணவகத்தில் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டார். 3 நாட்கள் வலியால் அவதிப்பட்ட அவர் கடைசியாக மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை எண்டோஸ்கோப்பி பரிசோதனைக்கு உட்படுத்திய மருத்துவர்கள் அவரது வயிற்றில் கரப்பான்பூச்சி ஒன்று உயிருடன் இருப்பதை அறிந்தனர்.
உடனே எண்டோஸ்கோப்பி முறையில் 10 நிமிடத்தில் அவரது வயிற்றில் இருந்த கரப்பான்பூச்சியை வெற்றிகரமாக மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அந்த கரப்பான்பூச்சி 3 சென்டிமீட்டர் நீளம் கொண்டதாக இருந்துள்ளது.
சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதுபோன்ற வழக்குகள் உயிருக்கு ஆபத்தானவை என்று டாக்டர் வாத்ஸ்யா எச்சரித்தார். எண்டோஸ்கோபி மூலம் விரைவாக செயல்பட்டதாக டாக்டர் கூறினார்.
நோயாளி சாப்பிடும் போது கரப்பான் பூச்சியை விழுங்கியிருக்கலாம் அல்லது தூங்கும் போது அது அவரது வாயில் நுழைந்து இருக்கலாம் என்றார். தாமதமான தலையீடு தொற்று கோளாறுகள் உட்பட கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுத்து இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.