நீர்வீழ்ச்சியில் இருந்து விழுந்த கார்... சிக்கிக் கொண்ட 13வயது சிறுமி.. பதைபதைக்கும் வீடியோ!

 
MP

மத்திய பிரதேசத்தில் அருவியில் கார் விழுந்து விபத்துக்குள்ளான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் சிம்ரோல் என்ற இடத்தில் சிறிய நீர்வீழ்ச்சி உள்ளது. இந்த நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சிவப்பு நிற கார் ஒன்று நீர்வீழ்ச்சியில் தலை குப்புற விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த காரில் 13 வயது சிறுமியும், அவரது தந்தையும் இருந்துள்ளனர்.

MP

கார் நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த நிலையில் சிறுமியின் தந்தை தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார்.  அப்போது காருக்குள் சிக்கிக்கொண்ட சிறுமி கூச்சலிட்டு அலறியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் அங்கு செய்வதறியாது நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர், குளத்தில் குதித்து சிறுமியின் தந்தையை பத்திரமாக மீட்டர். பின்னர் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் காரில் சிக்கிக் கொண்டிருந்த சிறுமியை மீட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அபாயத்தை உணராமல், நீர்வீழ்ச்சியின் குளத்திற்கு அருகாமையில் அலட்சியப் போக்குடன் கார் இயக்கப்பட்டதே விபத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளனர்.

From around the web