அதிகாலையில் சாலையில் பற்றி எரிந்த கார்.. முற்றிலும் எரிந்து போன உடல்.. கேரளாவில் பரபரப்பு!

 
Kerala

கேரளாவில் தீப்பிடித்து எரிந்த சாலையோரம் நின்ற காரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா குட்டநாட்டில் தாயங்கரி போட் ஜெட்டி சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த  அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத்துறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர்.

Kerala

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். அப்போது ஓட்டுநர் இருக்கையில் ஆணின் சடலம் எரிந்த நிலையில் இருந்தது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடல் முற்றிலும் எரிந்து போனதால் அடையாளம் காண முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கார் எடத்தவத்தை சேர்ந்த ஜேம்ஸ்குட்டி என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.

Police

பின்னர் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web